கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளதால் தமிழகமும் ஜிஎஸ்டி சட்டத்திற்கு ஆதரவுநிதியமைச்சர் ஜெயக்குமார்

பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளதால் தமிழகமும் ஜிஎஸ்டி சட்டத்திற்கு ஆதரவு அளித்ததாக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் இறுதிக்கூட்டம் நடைபெற்றது.  இதில், ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் ஒரேவிதமான சரக்கு மற்றும் சேவை வரியை அமலுக்குக் கொண்டுவர  தீர்மானிக்கப்பட்டது. மாநில அரசுகள் தரப்பில், நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு முழு சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிதியமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: ஜிஎஸ்டி சட்டத்தால் மாநில அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை மத்திய அரசு உறுதிபடுத்த வேண்டும். பெட்ரோலியம், மதுபானம் முதலிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளதால் தமிழகமும் ஜிஎஸ்டி சட்டத்திற்கு ஆதரவு அளித்தது. மாநில அரசுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டுவது தொடர்பாக, உரிய விளக்கத்தையும் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Read More

விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும்; விஜயகாந்த் வலியுறுத்தல்

தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–இயற்கையின் அனைத்து வளங்களும் இருக்கக்கூடிய நம்நாட்டில், உணவுப்பொருட்கள், பிற அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. விலைவாசி உயர்வினால் பாதிக்கப்படுவோர் ஏழை மக்களே. விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த சரியான திட்டங்களை அரசு நடைமுறைபடுத்தும் நிர்வாக அமைப்பு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. பெட்ரோல் விலை மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலை அடிக்கடி அதிகரிப்பதால் மற்ற பொருட்களின் விலை உயர்வடைகிறது. மக்களின் தேவைக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்ய ஆக்கபூர்வமான திட்டங்கள் தீட்டி செயல்படுத்தாத நிலையில் அரசு உள்ளது. மாநகராட்சி, நகராட்சி அருகில் உள்ள கிராமங்களில்,விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளதால், காய்கறிகளின் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்…

Read More

பாடகி சுசித்ராவுக்கு மனநிலை பாதித்து விட்டது கணவர் கார்த்திக் வெளியிட்ட தகவலால் பரபரப்பு

பிரபல சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனுஷ் ஆட்கள் தன்னை காயப்படுத்தி விட்டதாக கூறி இருந்தார். படமும் வெளியானது. பின்னர் அந்த தகவலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சுசித்ரா கூறி இருந்தார். இதுபற்றி சுசித்ராவின் கணவர் கார்த்திக் வெளியிட்ட தகவலில், ‘சுசித்ராவின் டுவிட்டர் யாரோ சிலரால் முடக்கப்பட்டு விட்டது. அதில் வெளியான படத்துக்கும், செய்திக்கும் எனது மனைவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்   கொள்கிறேன்’ என்று கூறி இருந்தார். தொடர்ந்து டுவிட்டரில் வெளியான செய்தியில் சுசித்ரா அவரது கணவர் கார்த்திக்கை டைவர்ஸ் செய்து விட்டதாக கூறப்பட்டிருந்தது. பின்னர் அதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. முடக்கப்பட்ட டுவிட்டர் மீட்கப்பட்ட தாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று சுசித்ராவின் டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகைகள்…

Read More

டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக தளவாய் சுந்தரம் நியமனம்

தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதாவின் கட்சிப் பதவியான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்ந்து எடுக்கப்பட்டார். ஆனால் ஆட்சிப்பொறுப்பை அவர் ஏற்க முடியாத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேசமயம், கட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. எதிரணியில் உள்ள ஓ.பி.எஸ். உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அமைச்சர் செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோருக்கு பதவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை தமிழக அரசு நியமித்துள்ளது. கேபினட் அந்தஸ்து கொண்ட இந்த சிறப்பு பிரதிநிதி பதவிக்கு தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டிருப்பதால், அவர், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாலமாக செயல்பட்டு பணிகளை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றுவார். தமிழகத்தின் தலைமை செயலகத்துக்கு சென்று, அரசு சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகளையும் பார்க்கும்…

Read More

தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பான விற்பனை அடியோடு சரிந்தது

சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க கூடாது, குடிக்க கூடாது என்ற முடிவை தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வியாபாரிகள் சங்கங்கள் எடுத்தன. அன்று எடுக்கப்பட்ட முடிவின் விளைவு சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்கள் மட்டு மின்றி கிராமங்கள் வரை கோகோ கோலா, பெப்சி, 7அப், ஸ்பரைட் போன்ற வெளிநாட்டு குளிர்பான விற்பனை கடுமையாக பாதித்துள்ளது. தமிழ்நாடு வணிகர் பேரவையும், தமிழ்நாடு வணிகர் பேரமைப்பும் வெளிநாட்டு குளிர்பானங்களை அனைத்து வியாபாரிகளும் வாங்கி விற்க வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றன.  அதற்கு பதிலாக உள்நாட்டு குளிர்பானங்கள், ஜுஸ் போன்றவற்றை விற்க முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் உள்ள சிறு பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் கூட வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய்வது படிப்படியாக குறைக்கப்பட்டன. பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ள தமிழ் உணர்வு காரணமாக…

Read More

தமிழகம் முழுவதும் விதிகளை மீறி அமைக்கப்பட்ட 325 மதுபானக் கடைகள் மூடப்பட்டன

மாற்றம் இந்தியா என்ற அமைப்பின் இயக்குனர் ஏ.நாராயணன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே டாஸ்மாக் மதுபான கடைகள் இருக்கக் கூடாது. அதாவது மாநகரம் என்றால் 500 மீட்டருக்குள்ளும், பிற மாவட்டங்களில் ஆயிரம் மீட்டருக்குள்ளும் மதுபானக் கடைகள் இருக்கக்கூடாது என்று தமிழ்நாடு மதுவிற்பனை விதி கூறுகிறது. ஆனால், தமிழகம் முழுவதும் ஏராளமான மதுபானக்கடைகள், கல்வி நிறுவனங்கள், வழிப்பாட்டு தலங்களுக்கு மிக அருகில் உள்ளது. எனவே, விதிகளை மீறி உள்ள இந்த கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார். 900 கடைகள் இந்த வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, தமிழகத்தில் 900 மதுபானக் கடைகள் விதிகளை மீறி அமைந்துள்ளது என்று கூறினார். இதையடுத்து, விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள…

Read More

வாரணாசியில் மாபெரும் பேரணி காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

பிரதமர் நரேந்திர மோடி தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் பேரணியாக சென்று, காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் கால பைரவர் கோவில்களில் வழிபாடு மேற்கொண்டார். சிறப்பு பூஜைகள் பிரதமர் நரேந்திர மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரபிரதேசத்தில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாரணாசியில் வருகிற 8-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே வாரணாசியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அவர் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக காலையில் வாரணாசி சென்ற பிரதமர் மோடி அங்கு மாபெரும் பேரணி நடத்தினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழக வாசலில் இருந்து தொடங்கிய இந்த பேரணி அஸ்சி, சோனார்புரா பகுதிகளை கடந்து முதற்கட்டமாக காசி விஸ்வநாதர் கோவிலை அடைந்தது. அங்கு அவர் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். கோவிலில் சுமார் 1…

Read More

சிறையில் இருந்து உ.பி. தேர்தலில் போட்டியிடும் கைதிகள்

சிறையில் இருந்தபடி தேர்தலில் போட்டியிடும் வழக்கம் உ.பி.யில் தொடர்கிறது. உ.பி. தேர்தலில் குறிப்பாக இறுதிக்கட்ட தேர்தலில் கைதிகள் பலர் சிறையில் இருந்தபடி போட்டி யிடுகின்றனர். இதை அவர்கள் கவுரமாக கருதுகின்றனர். கிழக்கு உ.பி.யின் மகராஜ்கன்ச் மாவட்டத்தில் உள்ள நவ்தன்வான் தொகுதியில் அமன்மணி திரிபாதி என்ற கைதி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இவர் தனது மனைவியை கொன்றதாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் சிறையில் உள்ளார். இவருக்கு ஆளும் சமாஜ்வாதி கட்சி சார்பில் கிடைப்ப தாக இருந்த வாய்ப்பு நழுவிவிட்ட தால் சுயேச்சை வேட்பாளர் ஆகி விட்டார். இவருக்கு எதிராக இவரது மாமியார் வீடியோ பதிவு ஒன்றை யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அமன்மணி மட்டுமின்றி, அவரது தந்தை அமர்மணி திரிபாதி (உ.பி. முன்னாள் அமைச்சர்), தாய் மதுமணி திரிபாதி ஆகியோரும் சிறையில் உள்ளனர். இவர்கள் இருவரும் பெண் பாடகி…

Read More

இந்தியரைக் காப்பாற்ற முயன்ற அமெரிக்கருக்கு இந்தியா தலைவணங்குகிறது: சுஷ்மா சுவராஜ்

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம், ஒலாத்தே என்ற இடத்தில் உள்ள கார்மின் என்னும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய என்ஜினீயர் சீனிவாஸ் குச்சிபோட்லா (வயது 32), மதுபான விடுதி ஒன்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த 22-ந் தேதி இரவு இனவெறியால் அவிழ்த்துவிடப்பட்ட இந்த வன்செயலில், அவரது இந்திய நண்பர் அலோக் மதசானியும், அமெரிக்கரான இயன் கிரில்லாட்டும் படுகாயம் அடைந்தனர். தாக்குதலை நடத்திய அமெரிக்க கடற்படை வீரர் ஆதம் புரிண்டன் (51) கைது செய்யப்பட்டார். இனவெறி காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சீனிவாஸ் குச்சிபோட்லா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது என்று அந்நாடு அதிபர் வெள்ளை மாளிகை வருத்தம் தெரிவித்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கன்சாஸ் துப்பாக்கிச்சூட்டில் இந்தியரைக் காப்பாற்ற முயன்ற அமெரிக்கருக்கு இந்தியா தலைவணங்குகிறது என்று கூறிஉள்ளார். சுஷ்மா ஸ்வராஜ் இயன்…

Read More

மேயர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தபோவதில்லை தேவேந்திரபட்னாவிஸ் உறுதி

227 வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 84 இடங்களில் வெற்றிபெற்ற சிவசேனாவும், 82 இடங்களை கைப்பற்றிய பா.ஜனதாவும் மேயர் பதவியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. மேயர் பதவிக்கு  எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காததால் மேயர் பதவி யார் வகிப்பது என போட்டி நிலவி வருகிறது.  84 இடங்களில் வெற்றிபெற்ற சிவசேனா மேயர் பதவியை யாருக்கும் விட்டு தரப்போவதில்லை கூறிவருகிறது. இந்நிலையில் அம்மாநில முதல்-மந்திரி தேவேந்திரபட்னாவிஸ்  செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேயர் அல்லது துணை மேயர் பதவி போட்டிக்கு வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை. மேயர் பதவியேற்கும் கட்சிக்கு ஆதரவளிப்போம். இவ்வாறு அவர் கூறினார். வரும் 8-ம் தேதி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பதவிகளை கைப்பற்ற மொத்தம் 114 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாக உள்ளது. இந்த…

Read More