சென்னை கபாலீசுவரர் கோவிலில் மரகத மயில் சிலை கையாடல் செய்யப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திரு மகள் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு பழமையான சிலைகள் கடத்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக சென்னை ஐகோர்ட்டு நியமித்துள்ளது. அவர் ஓய்வுபெற்ற நிலையில் மேலும் 1 ஆண்டுக்கு அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டும் மறுத்துவிட்டது. இந்தநிலையில் ஏற்கனவே சிலை கடத்தல் வழக்குகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள பொன் மாணிக்கவேல் மீண்டும் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ்கந்தர் தங்க சிலையை போலியாக செய்த வழக்கில் இந்து அறநிலையத்துறை அதிகாரி கவிதா கைது செய்யப்பட்டார்.…
Read MoreCategory: மாநில செய்திகள்
ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்காக ரேசன் கார்டில் பெயர் பதிவுக்கு குழந்தைகளுக்கும் ஆதார் கட்டாயம்
ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்காக ரேசன் கார்டில் பெயர் பதிவுக்கு குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மாநில மின் ஆளுமை முகமையின் கீழ் ஆதார் உள்ளிட்ட இசேவைப் பணிகள் நடந்து வருகின்றன. மத்திய அரசு அனைத்து விபரங்களையும் மின் ஆளுமை பணிகளில் இணைத்து ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரேசன் பயன்பாட்டுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்க முன்னேற்பாடாக ரேசன் கடைகளுக்கு பி.ஓ.எஸ். (பாயிண்ட் ஆப் சேல்) மிஷின்கள் வழங்கப்பட்டு, விபரங்கள் பதிவேற்றப்பட்டன. ஏப்ரல் முதல் வாரத்தில் ரேசன் கார்டுதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளன. இதனால் புதிதாக பிறந்தது முதல் 5 வயது வரையிலான குழந்தைகள், 18 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் விபரங்கள் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரேசன் பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் குழந்தைகள், பள்ளி…
Read Moreஇலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 85 பேர் இன்று காரைக்கால் வருகை
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 85 பேர் இன்று மாலை 6 மணிக்கு காரைக்காலில் உள்ள மார்க் துறைமுகத்துக்கு வருகின்றனர். ராமேசுவரம் பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 38 பேர் நாகை மீனவர்கள் 26 பேர் ஜெகதாம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 21 பேர் உள்ளபட 85 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கையில் உள்ள சிறைகளில் கடந்த 2 மாத காலமாக அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதால் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தணிக்கும் வகையில் இலங்கை சிறையில் உள்ள 85 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்தது. இதையொட்டி அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 85 பேரையும் மீட்டு வர இந்திய…
Read Moreநெடுவாசல் போராட்டக்காரர்களை டெல்லி அழைத்துச் செல்வேன்: அமைச்சர் பொன் ராதா அறிவிப்பு
மதுரையில் நெடுவாசல் போராட்டக் குழுவினருடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் போராட்டக் குழுவினர் திட்டத்தை கைவிடும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நெடுவாசல் திட்டத்துக்கு எதிரான போராட்டம் குறித்து ஏற்கெனவே மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் நான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். அப்போது மக்கள் விரும்பவில்லையென்றால் கைவிடப்படும் என்று அவர் தெரிவித்தார். ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை தமிழக மக்கள் மட்டுமே எதிர்க்கின்றனர். நான் இன்று நெடுவாசல் குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். இதில் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் தெளிவாக பதில் அளித்தனர். ஆனால் போராட்டக் குழுவினரிடையே சில புரிதல் இன்னும் முழுமையடையவில்லை. அதனால், இரண்டாம் கட்டமாக டெல்லிக்கு நெடுவாசல் குழுவினரை அழைத்துச் சென்று பெட்ரோலியத்துறை அமைச்சர் முன்னிலையில்…
Read Moreநெடுவாசல் பகுதி மக்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும் -புதுக்கோட்டை ஆட்சியர் கணேஷ்
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ‘ஹைட்ரோ கார்பன்’ எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் கடந்த 16-ந் தேதி முதல் சுற்றுவட்டார 100 கிராமங்களை சேர்ந்த மக்கள் அறவழியில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுதவிர ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ள சில இடங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு 100 கிராமங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் போராட்ட குழுவாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் 1-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது இந்த திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்று முதல்-அமைச்சர் உறுதி அளித்தார். எனவே போராட்ட குழுவினர், போராட்டத்தை தொடருவதா? என்பது பற்றி கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றனர். நெடுவாசல் மற்றும்…
Read Moreகோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளதால் தமிழகமும் ஜிஎஸ்டி சட்டத்திற்கு ஆதரவுநிதியமைச்சர் ஜெயக்குமார்
பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளதால் தமிழகமும் ஜிஎஸ்டி சட்டத்திற்கு ஆதரவு அளித்ததாக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் இறுதிக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் ஒரேவிதமான சரக்கு மற்றும் சேவை வரியை அமலுக்குக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது. மாநில அரசுகள் தரப்பில், நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு முழு சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிதியமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: ஜிஎஸ்டி சட்டத்தால் மாநில அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை மத்திய அரசு உறுதிபடுத்த வேண்டும். பெட்ரோலியம், மதுபானம் முதலிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளதால் தமிழகமும் ஜிஎஸ்டி சட்டத்திற்கு ஆதரவு அளித்தது. மாநில அரசுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டுவது தொடர்பாக, உரிய விளக்கத்தையும் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
Read Moreவிலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும்; விஜயகாந்த் வலியுறுத்தல்
தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–இயற்கையின் அனைத்து வளங்களும் இருக்கக்கூடிய நம்நாட்டில், உணவுப்பொருட்கள், பிற அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. விலைவாசி உயர்வினால் பாதிக்கப்படுவோர் ஏழை மக்களே. விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த சரியான திட்டங்களை அரசு நடைமுறைபடுத்தும் நிர்வாக அமைப்பு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. பெட்ரோல் விலை மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலை அடிக்கடி அதிகரிப்பதால் மற்ற பொருட்களின் விலை உயர்வடைகிறது. மக்களின் தேவைக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்ய ஆக்கபூர்வமான திட்டங்கள் தீட்டி செயல்படுத்தாத நிலையில் அரசு உள்ளது. மாநகராட்சி, நகராட்சி அருகில் உள்ள கிராமங்களில்,விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளதால், காய்கறிகளின் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்…
Read Moreடெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக தளவாய் சுந்தரம் நியமனம்
தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதாவின் கட்சிப் பதவியான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்ந்து எடுக்கப்பட்டார். ஆனால் ஆட்சிப்பொறுப்பை அவர் ஏற்க முடியாத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேசமயம், கட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. எதிரணியில் உள்ள ஓ.பி.எஸ். உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அமைச்சர் செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோருக்கு பதவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை தமிழக அரசு நியமித்துள்ளது. கேபினட் அந்தஸ்து கொண்ட இந்த சிறப்பு பிரதிநிதி பதவிக்கு தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டிருப்பதால், அவர், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாலமாக செயல்பட்டு பணிகளை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றுவார். தமிழகத்தின் தலைமை செயலகத்துக்கு சென்று, அரசு சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகளையும் பார்க்கும்…
Read Moreதமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பான விற்பனை அடியோடு சரிந்தது
சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க கூடாது, குடிக்க கூடாது என்ற முடிவை தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வியாபாரிகள் சங்கங்கள் எடுத்தன. அன்று எடுக்கப்பட்ட முடிவின் விளைவு சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்கள் மட்டு மின்றி கிராமங்கள் வரை கோகோ கோலா, பெப்சி, 7அப், ஸ்பரைட் போன்ற வெளிநாட்டு குளிர்பான விற்பனை கடுமையாக பாதித்துள்ளது. தமிழ்நாடு வணிகர் பேரவையும், தமிழ்நாடு வணிகர் பேரமைப்பும் வெளிநாட்டு குளிர்பானங்களை அனைத்து வியாபாரிகளும் வாங்கி விற்க வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றன. அதற்கு பதிலாக உள்நாட்டு குளிர்பானங்கள், ஜுஸ் போன்றவற்றை விற்க முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் உள்ள சிறு பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் கூட வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய்வது படிப்படியாக குறைக்கப்பட்டன. பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ள தமிழ் உணர்வு காரணமாக…
Read Moreதமிழகம் முழுவதும் விதிகளை மீறி அமைக்கப்பட்ட 325 மதுபானக் கடைகள் மூடப்பட்டன
மாற்றம் இந்தியா என்ற அமைப்பின் இயக்குனர் ஏ.நாராயணன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே டாஸ்மாக் மதுபான கடைகள் இருக்கக் கூடாது. அதாவது மாநகரம் என்றால் 500 மீட்டருக்குள்ளும், பிற மாவட்டங்களில் ஆயிரம் மீட்டருக்குள்ளும் மதுபானக் கடைகள் இருக்கக்கூடாது என்று தமிழ்நாடு மதுவிற்பனை விதி கூறுகிறது. ஆனால், தமிழகம் முழுவதும் ஏராளமான மதுபானக்கடைகள், கல்வி நிறுவனங்கள், வழிப்பாட்டு தலங்களுக்கு மிக அருகில் உள்ளது. எனவே, விதிகளை மீறி உள்ள இந்த கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார். 900 கடைகள் இந்த வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, தமிழகத்தில் 900 மதுபானக் கடைகள் விதிகளை மீறி அமைந்துள்ளது என்று கூறினார். இதையடுத்து, விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள…
Read More