நெடுவாசல் பகுதி மக்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும் -புதுக்கோட்டை ஆட்சியர் கணேஷ்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ‘ஹைட்ரோ கார்பன்’ எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் கடந்த 16-ந் தேதி முதல் சுற்றுவட்டார 100 கிராமங்களை சேர்ந்த மக்கள் அறவழியில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுதவிர ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ள சில இடங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டத்துக்கு 100 கிராமங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் போராட்ட குழுவாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் 1-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது இந்த திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்று முதல்-அமைச்சர் உறுதி அளித்தார். எனவே போராட்ட குழுவினர், போராட்டத்தை தொடருவதா? என்பது பற்றி கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றனர்.
நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை நிரந்தரமாக கைவிட்டு விட்டோம் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்” என்று போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கணேஷ்வுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கோட்டைக்காடு போராட்டக்குழு தலைவர் ஆரோக்கியசாமி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை ஆட்சியர் கணேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை 9 மாதத்திற்குள் மூடவும், கருவிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெடுவாசல் பகுதி மக்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

Leave a Comment