ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்காக ரேசன் கார்டில் பெயர் பதிவுக்கு குழந்தைகளுக்கும் ஆதார் கட்டாயம்

ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்காக ரேசன் கார்டில் பெயர் பதிவுக்கு குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மாநில மின் ஆளுமை முகமையின் கீழ் ஆதார் உள்ளிட்ட இசேவைப் பணிகள் நடந்து வருகின்றன. மத்திய அரசு அனைத்து விபரங்களையும் மின் ஆளுமை பணிகளில் இணைத்து ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரேசன் பயன்பாட்டுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்க முன்னேற்பாடாக ரேசன் கடைகளுக்கு பி.ஓ.எஸ். (பாயிண்ட் ஆப் சேல்) மிஷின்கள் வழங்கப்பட்டு, விபரங்கள் பதிவேற்றப்பட்டன. ஏப்ரல் முதல் வாரத்தில் ரேசன் கார்டுதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளன. இதனால் புதிதாக பிறந்தது முதல் 5 வயது வரையிலான குழந்தைகள், 18 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் விபரங்கள் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரேசன் பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் குழந்தைகள், பள்ளி…

Read More

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 85 பேர் இன்று காரைக்கால் வருகை

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 85 பேர் இன்று மாலை 6 மணிக்கு காரைக்காலில் உள்ள மார்க் துறைமுகத்துக்கு வருகின்றனர். ராமேசுவரம் பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 38 பேர் நாகை மீனவர்கள் 26 பேர் ஜெகதாம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 21 பேர் உள்ளபட 85 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கையில் உள்ள சிறைகளில் கடந்த 2 மாத காலமாக அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதால் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தணிக்கும் வகையில் இலங்கை சிறையில் உள்ள 85 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்தது. இதையொட்டி அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.  விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 85 பேரையும் மீட்டு வர இந்திய…

Read More

போர்க்குற்ற விசாரணைக்கு கூடுதலாக 2 ஆண்டு கால அவகாசம் கேட்கிறது, இலங்கை

இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. கணக்கெடுப்பில் தெரிய வந்தது. இந்த விவகாரம் குறித்து கடந்த 2015–ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து பல்வேறு நாட்டு நீதிபதிகளைக் கொண்டு, 18 மாதங்களுக்குள் இலங்கை அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், விசாரணையில் அக்கறை செலுத்தாத இலங்கை அரசு, இந்த விசாரணைக்காக மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்குமாறு ஐ.நா.விடம் கேட்டுள்ளது. இத்தகவலை இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஆனால், கால நீட்டிப்பு தரக்கூடாது என்று தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் உள்ள தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

Read More

கோவா முதல்மந்திரியாக பதவியேற்றார் மனோகர் பாரிக்கர்

நாளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் கோவா முதல் மந்திரியாக மனோகர் பாரிக்கர் இன்று பதவியேற்றுக் கொண்டார். 40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கோவாவில் 13 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்றுள்ள பா.ஜ.க., பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கரை முதல்மந்திரியாக முன்னிறுத்தியது. இதையடுத்து, கோவா மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா-வை நேற்று முந்தினம் சந்தித்த பாரிக்கர் தனது 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். அதையடுத்து, மனோகர் பாரிக்கரை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.  பா.ஜ.க ஆட்சியமைப்பதை எதிர்த்து காங்கிரஸ்…

Read More

மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு

இம்பால், மணிப்பூரில் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். முதல்-மந்திரியாக பைரன் சிங் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார். அடுத்த வாரம் அவர் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார். யாருக்கும் பெரும்பான்மை இல்லை நடைபெற்று முடிந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி இப்போது 28 இடங்களை பிடித்து, தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. 60 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், ஆட்சி அமைப்பதற்கு 31 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. இரண்டாவது பெரிய கட்சியாக 21 இடங்களைப் பிடித்த பாரதீய ஜனதா வந்துள்ளது. நாகா மக்கள் முன்னணியும், தேசிய மக்கள் கட்சியும் தலா 4 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ், லோக்ஜனசக்தி, சுயேச்சை ஆகியோர் தலா 1 இடங்களையும்…

Read More

அருண் ஜெட்லி ராணுவ மந்திரியாக கூடுதல் பொறுப்பு ஏற்றார்

மத்திய ராணுவ மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்று கொண்டதால் அருண் ஜெட்லி நேற்று ராணுவ மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மத்திய ராணுவ மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்று உள்ளார். அவர் தனது ராணுவ மந்திரி பதவியை ராஜினாமா செய்ததால், பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரையின் பேரில் நிதி மந்திரி அருண் ஜெட்லி ராணுவ மந்திரி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை அறிவித்தது. அதன்படி அருண் ஜெட்லி நேற்று ராணுவ மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அருண் ஜெட்லி ஏற்கனவே நரேந்திர மோடி தலைமையிலான மந்திரிசபை பதவி ஏற்றபோது நிதி மந்திரியுடன் கூடுதல் பொறுப்பாக ராணுவ மந்திரியாகவும் பதவி வகித்தார். மனோகர் பாரிக்கர் கோவா அரசியலில் இருந்து வரும்வரை சுமார் 6 மாதங்களுக்கு…

Read More