அருண் ஜெட்லி ராணுவ மந்திரியாக கூடுதல் பொறுப்பு ஏற்றார்

மத்திய ராணுவ மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்று கொண்டதால் அருண் ஜெட்லி நேற்று ராணுவ மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

மத்திய ராணுவ மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்று உள்ளார். அவர் தனது ராணுவ மந்திரி பதவியை ராஜினாமா செய்ததால், பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரையின் பேரில் நிதி மந்திரி அருண் ஜெட்லி ராணுவ மந்திரி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை அறிவித்தது. அதன்படி அருண் ஜெட்லி நேற்று ராணுவ மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அருண் ஜெட்லி ஏற்கனவே நரேந்திர மோடி தலைமையிலான மந்திரிசபை பதவி ஏற்றபோது நிதி மந்திரியுடன் கூடுதல் பொறுப்பாக ராணுவ மந்திரியாகவும் பதவி வகித்தார். மனோகர் பாரிக்கர் கோவா அரசியலில் இருந்து வரும்வரை சுமார் 6 மாதங்களுக்கு அவர் இந்த கூடுதல் பொறுப்பை கவனித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment