கபாலீசுவரர் கோவிலில் மயில் சிலை கையாடல் வழக்கில் நடவடிக்கை அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகள் கைது

சென்னை கபாலீசுவரர் கோவிலில் மரகத மயில் சிலை கையாடல் செய்யப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திரு மகள் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு பழமையான சிலைகள் கடத்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக சென்னை ஐகோர்ட்டு நியமித்துள்ளது. அவர் ஓய்வுபெற்ற நிலையில் மேலும் 1 ஆண்டுக்கு அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டும் மறுத்துவிட்டது. இந்தநிலையில் ஏற்கனவே சிலை கடத்தல் வழக்குகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள பொன் மாணிக்கவேல் மீண்டும் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ்கந்தர் தங்க சிலையை போலியாக செய்த வழக்கில் இந்து அறநிலையத்துறை அதிகாரி கவிதா கைது செய்யப்பட்டார்.…

Read More

ரபேல் ஒப்பந்த பேர வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை காங்கிரஸ் அவமதிக்கிறது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ரேபரேலி, பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரபிரதேசத்துக்கு சென்றார். நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சொந்த தொகுதியான ரேபரேலியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:- காங்கிரஸ் ஆட்சி காலத்தில், பாதுகாப்பு தளவாட கொள்முதல் அனைத்தும் தாய்மாமாக்கள் மூலமோ அல்லது இதர மாமாக்கள் மூலமோ தான் மேற்கொள்ளப்படும். சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்டியன் மிசெல் என்ற மாமாவை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளோம். ஆனால், பா.ஜனதா ஆட்சியில், குவாத்ரோச்சி மாமாவோ அல்லது கிறிஸ்டியன் மிசெலோ இல்லாமல் ராணுவ ஒப்பந்தம் செய்யப்படுவதால், காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது போலும். கிறிஸ்டியன் மிசெல் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டவுடன், காங்கிரஸ் கட்சி நேரத்தை வீணாக்காமல், தனது கட்சி வக்கீலை அவருக்காக ஆஜராக அனுப்பி வைத்தது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, ரபேல் விமான பேர ஒப்பந்தத்தில், ராணுவ அமைச்சகம், ராணுவ மந்திரி,…

Read More