மேயர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தபோவதில்லை தேவேந்திரபட்னாவிஸ் உறுதி

227 வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 84 இடங்களில் வெற்றிபெற்ற சிவசேனாவும், 82 இடங்களை கைப்பற்றிய பா.ஜனதாவும் மேயர் பதவியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. மேயர் பதவிக்கு  எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காததால் மேயர் பதவி யார் வகிப்பது என போட்டி நிலவி வருகிறது.
 84 இடங்களில் வெற்றிபெற்ற சிவசேனா மேயர் பதவியை யாருக்கும் விட்டு தரப்போவதில்லை கூறிவருகிறது.
இந்நிலையில் அம்மாநில முதல்-மந்திரி தேவேந்திரபட்னாவிஸ்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேயர் அல்லது துணை மேயர் பதவி போட்டிக்கு வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை. மேயர் பதவியேற்கும் கட்சிக்கு ஆதரவளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரும் 8-ம் தேதி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பதவிகளை கைப்பற்ற மொத்தம் 114 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாக உள்ளது. இந்த பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இல்லாதபோதிலும், மும்பை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான பெயர்களை சிவசேனா இன்று அறிவித்துள்ளது.

Related posts

Leave a Comment