தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதாவின் கட்சிப் பதவியான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்ந்து எடுக்கப்பட்டார். ஆனால் ஆட்சிப்பொறுப்பை அவர் ஏற்க முடியாத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேசமயம், கட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. எதிரணியில் உள்ள ஓ.பி.எஸ். உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அமைச்சர் செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோருக்கு பதவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை தமிழக அரசு நியமித்துள்ளது. கேபினட் அந்தஸ்து கொண்ட இந்த சிறப்பு பிரதிநிதி பதவிக்கு தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டிருப்பதால், அவர், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாலமாக செயல்பட்டு பணிகளை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றுவார். தமிழகத்தின் தலைமை செயலகத்துக்கு சென்று, அரசு சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகளையும் பார்க்கும்…
Read MoreDay: March 5, 2017
தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பான விற்பனை அடியோடு சரிந்தது
சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க கூடாது, குடிக்க கூடாது என்ற முடிவை தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வியாபாரிகள் சங்கங்கள் எடுத்தன. அன்று எடுக்கப்பட்ட முடிவின் விளைவு சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்கள் மட்டு மின்றி கிராமங்கள் வரை கோகோ கோலா, பெப்சி, 7அப், ஸ்பரைட் போன்ற வெளிநாட்டு குளிர்பான விற்பனை கடுமையாக பாதித்துள்ளது. தமிழ்நாடு வணிகர் பேரவையும், தமிழ்நாடு வணிகர் பேரமைப்பும் வெளிநாட்டு குளிர்பானங்களை அனைத்து வியாபாரிகளும் வாங்கி விற்க வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றன. அதற்கு பதிலாக உள்நாட்டு குளிர்பானங்கள், ஜுஸ் போன்றவற்றை விற்க முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் உள்ள சிறு பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் கூட வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய்வது படிப்படியாக குறைக்கப்பட்டன. பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ள தமிழ் உணர்வு காரணமாக…
Read Moreதமிழகம் முழுவதும் விதிகளை மீறி அமைக்கப்பட்ட 325 மதுபானக் கடைகள் மூடப்பட்டன
மாற்றம் இந்தியா என்ற அமைப்பின் இயக்குனர் ஏ.நாராயணன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே டாஸ்மாக் மதுபான கடைகள் இருக்கக் கூடாது. அதாவது மாநகரம் என்றால் 500 மீட்டருக்குள்ளும், பிற மாவட்டங்களில் ஆயிரம் மீட்டருக்குள்ளும் மதுபானக் கடைகள் இருக்கக்கூடாது என்று தமிழ்நாடு மதுவிற்பனை விதி கூறுகிறது. ஆனால், தமிழகம் முழுவதும் ஏராளமான மதுபானக்கடைகள், கல்வி நிறுவனங்கள், வழிப்பாட்டு தலங்களுக்கு மிக அருகில் உள்ளது. எனவே, விதிகளை மீறி உள்ள இந்த கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார். 900 கடைகள் இந்த வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, தமிழகத்தில் 900 மதுபானக் கடைகள் விதிகளை மீறி அமைந்துள்ளது என்று கூறினார். இதையடுத்து, விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள…
Read Moreவாரணாசியில் மாபெரும் பேரணி காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
பிரதமர் நரேந்திர மோடி தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் பேரணியாக சென்று, காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் கால பைரவர் கோவில்களில் வழிபாடு மேற்கொண்டார். சிறப்பு பூஜைகள் பிரதமர் நரேந்திர மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரபிரதேசத்தில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாரணாசியில் வருகிற 8-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே வாரணாசியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அவர் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக காலையில் வாரணாசி சென்ற பிரதமர் மோடி அங்கு மாபெரும் பேரணி நடத்தினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழக வாசலில் இருந்து தொடங்கிய இந்த பேரணி அஸ்சி, சோனார்புரா பகுதிகளை கடந்து முதற்கட்டமாக காசி விஸ்வநாதர் கோவிலை அடைந்தது. அங்கு அவர் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். கோவிலில் சுமார் 1…
Read Moreசிறையில் இருந்து உ.பி. தேர்தலில் போட்டியிடும் கைதிகள்
சிறையில் இருந்தபடி தேர்தலில் போட்டியிடும் வழக்கம் உ.பி.யில் தொடர்கிறது. உ.பி. தேர்தலில் குறிப்பாக இறுதிக்கட்ட தேர்தலில் கைதிகள் பலர் சிறையில் இருந்தபடி போட்டி யிடுகின்றனர். இதை அவர்கள் கவுரமாக கருதுகின்றனர். கிழக்கு உ.பி.யின் மகராஜ்கன்ச் மாவட்டத்தில் உள்ள நவ்தன்வான் தொகுதியில் அமன்மணி திரிபாதி என்ற கைதி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இவர் தனது மனைவியை கொன்றதாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் சிறையில் உள்ளார். இவருக்கு ஆளும் சமாஜ்வாதி கட்சி சார்பில் கிடைப்ப தாக இருந்த வாய்ப்பு நழுவிவிட்ட தால் சுயேச்சை வேட்பாளர் ஆகி விட்டார். இவருக்கு எதிராக இவரது மாமியார் வீடியோ பதிவு ஒன்றை யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அமன்மணி மட்டுமின்றி, அவரது தந்தை அமர்மணி திரிபாதி (உ.பி. முன்னாள் அமைச்சர்), தாய் மதுமணி திரிபாதி ஆகியோரும் சிறையில் உள்ளனர். இவர்கள் இருவரும் பெண் பாடகி…
Read Moreஇந்தியரைக் காப்பாற்ற முயன்ற அமெரிக்கருக்கு இந்தியா தலைவணங்குகிறது: சுஷ்மா சுவராஜ்
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம், ஒலாத்தே என்ற இடத்தில் உள்ள கார்மின் என்னும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய என்ஜினீயர் சீனிவாஸ் குச்சிபோட்லா (வயது 32), மதுபான விடுதி ஒன்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த 22-ந் தேதி இரவு இனவெறியால் அவிழ்த்துவிடப்பட்ட இந்த வன்செயலில், அவரது இந்திய நண்பர் அலோக் மதசானியும், அமெரிக்கரான இயன் கிரில்லாட்டும் படுகாயம் அடைந்தனர். தாக்குதலை நடத்திய அமெரிக்க கடற்படை வீரர் ஆதம் புரிண்டன் (51) கைது செய்யப்பட்டார். இனவெறி காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சீனிவாஸ் குச்சிபோட்லா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது என்று அந்நாடு அதிபர் வெள்ளை மாளிகை வருத்தம் தெரிவித்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கன்சாஸ் துப்பாக்கிச்சூட்டில் இந்தியரைக் காப்பாற்ற முயன்ற அமெரிக்கருக்கு இந்தியா தலைவணங்குகிறது என்று கூறிஉள்ளார். சுஷ்மா ஸ்வராஜ் இயன்…
Read Moreமேயர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தபோவதில்லை தேவேந்திரபட்னாவிஸ் உறுதி
227 வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 84 இடங்களில் வெற்றிபெற்ற சிவசேனாவும், 82 இடங்களை கைப்பற்றிய பா.ஜனதாவும் மேயர் பதவியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. மேயர் பதவிக்கு எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காததால் மேயர் பதவி யார் வகிப்பது என போட்டி நிலவி வருகிறது. 84 இடங்களில் வெற்றிபெற்ற சிவசேனா மேயர் பதவியை யாருக்கும் விட்டு தரப்போவதில்லை கூறிவருகிறது. இந்நிலையில் அம்மாநில முதல்-மந்திரி தேவேந்திரபட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேயர் அல்லது துணை மேயர் பதவி போட்டிக்கு வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை. மேயர் பதவியேற்கும் கட்சிக்கு ஆதரவளிப்போம். இவ்வாறு அவர் கூறினார். வரும் 8-ம் தேதி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பதவிகளை கைப்பற்ற மொத்தம் 114 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாக உள்ளது. இந்த…
Read Moreஜூலை முதல் ஜிஎஸ்டி அமலாக வாய்ப்பு: மாநிலங்கள் கோரிய 26 மாற்றங்களை ஏற்றது மத்திய அரசு
இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறை அமலாவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. டெல்லியில் மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை முக்கிய பிரச்சினையாக இருந்த மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) ஆகியவற்றுக்கு மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இருப்பினும் இறுதி ஒப்புதல் இம்மாதம் இரண்டாவது வாரத்தில் கிடைக்கும். டெல்லியில் 11-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்ள வேண்டிய ஜிஎஸ்டி மசோதா குறித்து இறுதி முடிவு எட்டப்பட்டது. இருப்பினும் மாநில ஜிஎஸ்டி குறித்து விவாதம்…
Read Moreவதோதராவில் இருந்த என்னை வாரணாசியில் தேர்ந்தெடுத்தீர்கள் – பிரதமர் மோடி
லக்னோ: உத்தரப் பிரதேச சட்டபேரவைக்கான 7-ஆவது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தல், எஞ்சியுள்ள 40 தொகுதிகளில், வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி, தனது சொந்தத் தொகுதியான வாராணசியில் திறந்த வேனில் சென்று நேற்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். வாராணசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் அதன் நிறுவனரும், சுதந்திரப் போராட்டத் தலைவருமான மதன் மோகன் மாளவியாவின் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு மோடி பிரசாரத்தைத் தொடங்கினார். பின்னர், காசி விசுவநாதர் ஆலயம், காலபைரவர் ஆலயம் ஆகியவற்றுக்குச் சென்று மோடி வழிபட்டார். பின்னர், அங்கிருந்து ஜான்பூருக்குச் சென்று அவர் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது மோடி பேசியதாவது:- நம் நாட்டில் ஏதாவது நல்ல காரியங்களைத் தொடங்கும்போது, காயத்ரி மந்திரத்தை நாம் உச்சரிப்போம். ஆனால், சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணியோ காயத்ரி பிரஜாபதி மந்திரத்தை உச்சரிக்கிறது. (பாலியல் புகாரில் சிக்கியுள்ள…
Read More