வரவேற்பு
கால் ன விடமாட்டோம் என்கிறார்கள் கேளடா
மூழ்கிறது முழங்கால் சேற்றிலே, அவர்களை பார்டா
சக்ரவியூகம் தகர்த்த வம்சத்திற்கு என்ன உண்டு வேலி?
போராட்டங்கள் கழித்தால் இவர்களுக்கு உண்டா ஜோலி?
எல்லா இரவுகளுக்கும் நிச்சயம் உண்டு,
இருளை நீக்க புது விடிவு ஒன்று.
ஐம்பது ஆண்டுகள் ஆன பின்னும்
வரவில்லையே விடிவு நமக்கு இன்னும்.
தலைவன் அழைத்ததால் வந்தவன் அல்ல நான்
அவரின் தரம் கண்டு சேர்ந்தவர்களின் ஒருவன் தான்.
ஊழலுக்கு வேண்டாமா இங்கேயும் ஒரு தடை?
அவரை விட்டால் நமக்கு உண்டா வேறு விடை?
தென் நாட்டு ராஜாக்கள் உண்டு பலர்
எவர் உண்டு அவரை போல் இங்கு ஒருவர்.
தன் நலம் எரிகின்ற ஒளியில் மட்டுமே
பிறர் நலம் காக்க நல் வழி தெரியுமே.
கம்பிரமாக செல்கிறது நம் நாடு, உலகத்தில் முன்னே
ஆனால் நாட்டிலே இங்கு, ஊழலால் செல்கிறோம் பின்னே.
வடக்கில் ஊழலை ஒழித்தோம், நாலு ஆண்டுகளே சாட்சி அதற்கும்
ஊழலற்ற ஆட்சியே ஒரு அறியாத பொக்கிஷம், வேண்டும் இங்கும்.
எல்லாம் இழந்தாலும் இழக்க முடியாதவை உண்டு சில
நம்மை தாங்கி முன் நிறுத்தும் அது, வஞ்சகர்களுக்கு பல
இருப்பினும் கண்களுக்கு இல்லை அவர்கள், மக்கள் மட்டுமே
பகையை மறப்போம், கை கோர்த்தால் மக்களுக்கு கிட்டுமே.
எல்லை சாமியின் கட்டளை, பின்னொட்டு வழி இல்லை எனக்கு
என்றும் நினைக்காத ஒரு வழி, அதுவே இனி லட்சிய இலக்கு.
என் எதிரிகளை விழுத்தும் பிரம்மாஸ்திரம் இருப்பது உன் கைகளிலே
உண் அழுகை கேட்டே நான் வந்தேன், தைரியமாக சொல் மத்தியிலே
சேற்றில் தாமரை முளைப்பதே, நம்மை சேற்றிலிருந்து காக்கவே
ஈடு இல்லா வளர்ச்சி; மாறுவோம் ஊழல் இல்லா புது தேசமாகவே.
வீசட்டும் தாமரையின் நற் குணங்கள், தென்னாட்டில் இங்கும் எங்கும்
மலரட்டும் தாமரை, ஓடட்டும் வஞ்சகர்கள், மீட்டெடுக்கப்படும் தென்னகம்.