கார்மேக காலங்கள்

 

எங்கே இருக்கிறாளோ அந்த தேவதை மணப்பெண்

அவள் வருகைக்காக இவன் கண்கள் ஏங்குது

அருகில் நிழலாய் எதிரே நிலவாய், அவளே அவனுக்கு

தீருமே அவன் போர்க்காலம், நல் முகூர்த்த நாள் ஒன்றில்.

 

வரப்பில் நடந்து அவள் வர, பின்னொட்டாக அவள் முன் அவனும்

அவளை கண்டெ அவன் நடக்க, சிரிப்பை அடக்கி அவளும்.

அழகும் பார்வையும் ஒன்றாக தாக்க, தடுமாறி விழுந்தான் அவன்

ஜொலிக்கின்ற முகத்தில் அடங்கா சிரிப்பு, கிள்ளிவிட்டு ஓடினாள்.

 

கார்மேகம் கூடிவர, பருவ காற்றும் குளிர்ந்து வீச

யாரும் இல்லா சந்தியாகாலம், மோக பார்வையில் அவள்.

கரங்கள் அவளை அணைக்க, தூண்டில் மீனாய் அவள் துடிக்க

அழுகை இடியாய் ஒலித்ததே, உடன் விலகி நின்றான்.

 

புன்னகைத்த முகத்தில் கண்ணீர் வர செய்தான்

அவன் கால்கள் தாங்க மறுத்தது, தலை குனிந்து மூட்டில் நின்றான்.

அவன் நிலை கண்டு மேலும் கதற, மழையில் கண்ணீர் கலந்தது

இருளும் வீச அவளும் ஓட, சிலையாய் நனைந்து கண்டான்.

 

காலம் செய்த கோலம், அவளை கண்டு அவன் ஒளிய

அவனை தேடும் கண்களில், புன்னகையை மீண்டும் கண்டான்.

முகூர்த்த நாளும் வந்தது, தெய்வமும் மக்களும் கூடினர்

மந்திரங்கள் ஓதி கெட்டி மேளம் முழங்க, மஞ்சள் சரடை கட்டினான்.

 

மனம் போல் மனம் முடித்த மணப்பெண் அவள்

திரி விளக்கில் அவள் ஜொலிக்க, கண் எடுக்காமல் நின்றான்

அவளும் கண்டு புன்னகைக்க, அவன் பார்வை மெல்ல சிதறின

அவன் நிலை தடுமாற கண்டு, உடன் அணைத்தாள் விளக்கை.

 

வலுவான ஆண் மயிலும் அழகான பெண் மயிலும்

கார்மேகம் கூடிவர, தொகை விரித்து ஆண் அழைக்க.

பெண்ணை மறைத்து ஆண் ஆட, பெண்ணும் கொஞ்சம் ஈடாக

ஸ்வரத்தில் இருவரும் இணைந்தனர், ஒன்றாய் மழையில் நனைந்தனர்.

 

 

Related posts

Leave a Comment