இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறை அமலாவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. டெல்லியில் மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை முக்கிய பிரச்சினையாக இருந்த மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) ஆகியவற்றுக்கு மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இருப்பினும் இறுதி ஒப்புதல் இம்மாதம் இரண்டாவது வாரத்தில் கிடைக்கும். டெல்லியில் 11-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்ள வேண்டிய ஜிஎஸ்டி மசோதா குறித்து இறுதி முடிவு எட்டப்பட்டது. இருப்பினும் மாநில ஜிஎஸ்டி குறித்து விவாதம்…
Read MoreCategory: தேசிய செய்திகள்
வதோதராவில் இருந்த என்னை வாரணாசியில் தேர்ந்தெடுத்தீர்கள் – பிரதமர் மோடி
லக்னோ: உத்தரப் பிரதேச சட்டபேரவைக்கான 7-ஆவது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தல், எஞ்சியுள்ள 40 தொகுதிகளில், வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி, தனது சொந்தத் தொகுதியான வாராணசியில் திறந்த வேனில் சென்று நேற்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். வாராணசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் அதன் நிறுவனரும், சுதந்திரப் போராட்டத் தலைவருமான மதன் மோகன் மாளவியாவின் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு மோடி பிரசாரத்தைத் தொடங்கினார். பின்னர், காசி விசுவநாதர் ஆலயம், காலபைரவர் ஆலயம் ஆகியவற்றுக்குச் சென்று மோடி வழிபட்டார். பின்னர், அங்கிருந்து ஜான்பூருக்குச் சென்று அவர் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது மோடி பேசியதாவது:- நம் நாட்டில் ஏதாவது நல்ல காரியங்களைத் தொடங்கும்போது, காயத்ரி மந்திரத்தை நாம் உச்சரிப்போம். ஆனால், சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணியோ காயத்ரி பிரஜாபதி மந்திரத்தை உச்சரிக்கிறது. (பாலியல் புகாரில் சிக்கியுள்ள…
Read More