பரிகாரம்

நீல வானமே, நீல வானமே மொத்த பூமியும் உன் ஒற்றை பார்வையில் எங்கு இருக்காள் என் தாவணி பெண், அவளை கண்டு சொல்வாயா என்னிடம் நீ. அனுக்கிரஹம் பெற சென்றேன், சன்னதியில் செய்த பாவம் உணர்ந்து நின்றேன் என் மாநிற  தாவணி பெண்ணே நீ வாராயோ என் பரிகாரம் தீர. பச்சை கிளியே, பச்சை கிளியே உன் குரலில் பேசுவாள் புன்னகை முகத்தால் கண்டால் சொல்லவும், நீ அவளை விட்டு மறந்தவன் தேடி வரான் என்று. காலம் சென்றாலும் உண்டு  பாவ கணக்கு அன்று விட்ட இடத்திலே  இன்று காத்து நிற்கிறேன் என் பொன்னான தாவணி பெண்ணே  நீ கை விட்டுவன் தான்; கை கொடுப்பாயா? சுற்றும் பூமியே, சுற்றும் பூமியே விலகி நிற்கிறேன் நாணும் நீ சுற்றி வரும்போல், அவளை என் முன் நிறுத்தி; நின்றிடு…

Read More